தெலுங்கிலும் விட்டுக் கொடுக்காமல் போட்டி போட்ட வாரிசுடு.. இமயம் போல் நின்ற வால்டர் வீரய்யா, வீரசிம்மரெட்டி

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி தமிழில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி தளபதி ரசிகர்களை குதூகல படுத்தியது. இதைத்தொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி தெலுங்கில் வாரிசு திரைப்படம் வாரிசுடு என்ற டைட்டிலில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதேசமயம் தெலுங்கில் ஜாம்பவான்களாக இருக்கும் இரண்டு பெரிய நடிகர்களின் போட்டியாக வாரிசுடு களமிறங்கியது. தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஜனவரி 12 ஆம் தேதியும், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் ஜனவரி 13-ஆம் தேதியும் ரிலீஸ் ஆனது.

Also Read: யாராலையும் வசூலை கெடுக்க முடியாது.. விஜய்யுடன் வாரிசு படக்குழு எடுக்கும் புதிய முயற்சி

இந்த இரண்டு படங்களின் மத்தியில் வாரிசுடு முதல் நாளில் மட்டும் 3.3 கோடியை தெலுங்கில் வசூல் செய்திருக்கிறது. அதேபோல் இரண்டாவது நாளில் 3.1 கோடியையும் வசூலிக்கிறது. மொத்தமாக இரண்டு நாட்களில் தெலுங்கில் மட்டும் தளபதி விஜய்யின் வாரிசுடு ஒட்டுமொத்தமாக 6.4 கோடியை வசூலித்திருக்கிறது.

அதிலும் தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா வெறும் மூன்றே நாட்களில் 108 கோடியை உலகெங்கும் வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது. அதேபோல் பாலையாவின் வீர சிம்மரெட்டி இதுவரை 10.77 கோடியை தெலுங்கில் மட்டும் வசூலித்து இருக்கிறது.

Also Read: யார் நம்பர் ஒன்.. பரபரப்பான வசூல் விவரத்தை வெளியிட்ட சென்னை தியேட்டர்

வெளிநாடுகளில் வீரசிம்மரெட்டி திரைப்படத்திற்கு 4 கோடி வசூலாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக வீரசிம்மரெட்டி படம் தொடர்ந்து நான்கு நாட்களில் உலக அளவில் 60.23 கோடியை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இரண்டு பெரும் இமய மலைகள் நடுவில் முதல் முதலாக தெலுங்கில் வாரிசு படத்தின் மூலம் விஜய் மாஸ் காட்டி இருப்பது கோலிவுட்டை பெருமை அடைய செய்திருக்கிறது.

இந்த மூன்று படங்களின் வசூல் விபரமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுவது மட்டுமல்லாமல் தளபதி ரசிகர்களையும் கெத்து காட்ட வைக்கிறது. தமிழில் வாரிசு மற்றும் துணிவுக்கு எப்படி போட்டி நிலவுகிறதோ அதே போல் தெலுங்கில் வாரிசுடு, வீரசிம்மரெட்டி, வால்டர் வீரய்யா போன்ற படங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Also Read: வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா-க்கு போட்டியாக ரிலீஸ் ஆன வாரிசு.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்