Videos | வீடியோக்கள்
பகை, வன்மம், பழிவாங்கும் படலம்- மணிரத்தினம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் ட்ரைலர்
வானம் கொட்டட்டும் படத்தை இணைந்து எழுதி தனது மெட்ராஸ் டாக்கீஸ் வாயிலாக தயாரிக்கிறார் மணிரத்தினம். மேலும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
மணியின் முன்னாள் அசிஸ்டன்ட் மற்றும் ’படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இப்படத்தின் இயக்குனர். தன் குருநாதருடன் இணைந்து இப்படத்தின் கதையா எழுதியுள்ளார். இதுவரை பாடகராக இருந்த சித் ஸ்ரீராம் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
