Connect with us
Cinemapettai

Cinemapettai

வாடிவாசல் படத்துக்காக சூர்யாவின் புதிய கெட் அப்! வைரலாகுது வேற லெவல் போட்டோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாடிவாசல் படத்துக்காக சூர்யாவின் புதிய கெட் அப்! வைரலாகுது வேற லெவல் போட்டோ

இன்றையை கோலிவுட் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷுடன் மட்டுமே இணைந்து பல படங்கள் ஹிட் கொடுத்தவர். தற்பொழுது சூரி, சூர்யா என இவரது அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட் உள்ளது.

vaadivasal-suriya

vaadivasal-suriya

சூர்யாவை வைத்து வாடிவாசல் நாவலை படமாக்கும் முயற்சியில் உள்ளார். 1959 இல் மதுரைக்காரரான சி சு செல்லப்பா எழுதிய குறுநாவல் வாடிவாசல். மண், மனிதர்கள் பற்றிய கதை. நம் மண்ணின் வீரம், பாரம்பரியம், ஜாதிய சிந்தனை போன்றவற்றை சல்லிக்கட்டின் பின்னணியில், வீரம் ததும்ப ததும்ப எழுதப்பட்ட 70 பக்க நாவலே வாடிவாசல்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. இப்படத்தில் அப்பா (அம்புலித்தேவன்) மற்றும் மகன் (பிச்சி) வேடங்களில் சூர்யா நடிக்கிறார். ஏற்கனவே வெளியானது மகன் வேடமாம்.அப்பா வேடத்தில் வயதான தோற்றத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு லாங் ஹேர் வளர்த்து வருகிறாராம் சூர்யா.

vaadivasal surya

சமீபத்தில் இவரது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. எத்தனை எதிர்ப்புகள் தடைகள் வந்தாலும் மனிதர் அடித்து துவைத்து முன்னேறுவார். வாழ்த்துக்கள் சூர்யா சார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top