சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இழுபறியில் வாடிவாசல்.. மேடையில் சூர்யாவின் சுய ரூபத்தை போட்டுக் கொடுத்த வெற்றிமாறன்

ஆறு தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெற்றிமாறன், அதன் பிறகு காக்கா முட்டை, விசாரணை, கொடி, வடசென்னை, அசுரன் போன்ற வித்தியாச வித்தியாசமான கதைக் களங்களை கொண்ட அற்புதமான படங்களை கொடுத்தவர்.

இவர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகயிருக்கும் வாடிவாசல் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஜல்லிக்கட்டை மையமாகக்கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தப் படத்திற்கான சூட்டிங் ஜூலை மாதம் துவங்கும் நிலையில், சமீபத்தில் வாடிவாசல் படத்தில் ஒரு காங்கேயன் காளை மாடு மற்றும் ஒரு நாட்டுரக காளை மாடுடன் சூர்யாவுக்கு டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம ட்ரெண்ட் ஆனது.

மேலும் இந்த படம் முழுவதும் சூர்யா, இந்த இரண்டு காளைகளுடன் நடிக்க உள்ளதால் அவற்றை தனது வீட்டிலேயே வைத்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக கால அவகாசம் ஏற்படுவதால் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது என வெற்றிமாறன் விளக்கம் அளித்திருக்கிறார்.

சூர்யா இந்த இரண்டு காளைகளுடன் நெருங்கிப் பழகுவதற்காகவே காலையில் அவற்றுடன் வாக்கிங் செல்வது போன்ற புகைப்படமும் வெளியாகி வருகின்றன. அத்துடன் மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்து, மாடு பிடிப்பது பற்றிய நுணுக்கங்களை சூர்யா கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

எனவே வாடிவாசல் படத்திற்கான ஆரம்ப நிலையிலேயே இருப்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் ஓபனாக பேசி இருக்கிறார். தற்போது வெற்றிமாறன் விஜய்சேதுபதி, சூரியை வைத்து விடுதலை என்ற படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருப்பதால், அந்தப் படம் முடிந்த பிறகு வாடிவாசல் படத்தை துவங்க போகிறார்.

மேலும் சூர்யாவும் பாலா இயக்கி கொண்டிருக்கும் சூர்யா 41-வது படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். காளைகளுடன் பழகி, பயிற்சி எடுக்க சிறிது காலம் தேவைப்படுவதால் வாடிவாசல் ஷூட்டிங் தள்ளிப் போகிறது. மேலும் சூர்யாவின் பிறந்த நாளான வரும் ஜூலை 22 ஆம் தேதி அன்று வாடிவாசல் படத்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் புகைப்படத்தை வாடிவாசல் படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

Trending News