Connect with us
Cinemapettai

Cinemapettai

இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லர்.. V I Murder Case திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லர்.. V I Murder Case திரைவிமர்சனம்

whodunit –  இந்த ஜானரை கையில் எடுக்கும் பொழுது கதாபாத்திர சித்தரிப்பில் ஆரம்பித்து திரைக்கதை அமைக்கும் பணி என அனைத்துமே சாலஞ்சிஞ் சமாச்சாரம் தான். ஆனால் அதனை தான் இயக்குனர் பாவல் நவகீதன் லைக் செய்துள்ளார்.

கதை – இரவு தனியாக நடந்து செல்லும் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அதனை துப்பறியும் பணி விஷ்ணு ப்ரியா வசம் செல்கிறது. அவர் டிபார்ட்மெண்டில் தனது நண்பரான ராம் அருண் காஸ்ட்ரோ அவர்களையும் இணைத்து இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறாள். கூடவே இருக்கும் பாய் பிரெண்ட், ஒரு தலைக்காதலன், அதே தெருவில் இருக்கும் சாடிஸ்ட், அந்த பகுதி நர்ஸ் என பல நபர்களின் மேல் செல்கிறது விசாரணை.

ஹீரோவின் பிளாஷ் பேக், அவருக்கு உள்ள பயம் சார்ந்த வியாதி, அவர் பண்ணிய தப்பு, அதன் விளைவு என தனி ட்ராக் அவருக்கும். யார் தான் ஜி கொலை செய்தது என நாம் மண்டையை உடைத்து சிந்திக்க, உச்சகட்ட ட்விஸ்டை கொடுத்து நம்மை முழி பிதுங்க வைக்கிறார் இயக்குனர்.

பிளஸ் – விஷ்ணு பிரியா ரோல், பின்னணி இசை, பாடல் இல்லாதது , கிளைமாக்ஸ் மெஸேஜ்

மைனஸ் – லாஜிக் மீறல்கள், இரண்டாம் பாதியில் தடுமாறும் திரைக்கதை

சினிமாபேட்டை அலசல் – மல்டிப்ளெக்ஸ் , ஹாலிவுட் பட விரும்பிகள், வெப் சீரிஸ் நபர்களை பெரிதும் கவராது இப்படம். எனினும் பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு கட்டாயம் பிடிக்கும். ராஜேஷ் குமார் நாவல் படித்த அனுபவத்தை இப்படம் கொடுக்கும். குறிப்பாக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மற்றும் அந்த மெசேஜை சொல்லியதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் இப் படக்குழுவுக்கு.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு சென்றால் திருப்தியுடன் திரும்பி வரலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top