மலை மாநிலமான உத்தரகாண்டின் சுற்றுலா வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட ஒரு நிமிட விளம்பரத்தில் கோஹ்லி நடித்திருந்தார்.

இதற்காக அவர் ரூ. 47 லட்சம் பணம் பெற்றதாக பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விபரங்களை பெற்றார்.

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதனை கோலியின் செய்தித் தொடர்பாளர் Bunty Sajdeh மறுத்துள்ளார்.

கோஹ்லி பணம் வாங்கவில்லை என்றும் இதுபற்றி தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதே நேரம் மாநில காங்கிரஸ் அரசு எல்லாம் சட்டப்படிதான் நடந்தது.

பா.ஜ.க அரசியல் ஆதாயத்திற்காக இந்த பிரச்சனையை பெரிதுபடுத்துகிறது எனத் தெரிவித்துள்ளது.