உத்தரகாண்ட் மாநிலம் விகாஷ்நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் நவ்பிரபாத் என்பவர் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்து, பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெற்று விட்டதாக உத்ரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. முசோரி, ராஜ்பூர், ராய்ப்பூர், ராணிப்பூர், ஹரித்துவார், பிராதப்பூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திர அறைகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதிகம் படித்தவை:  மிக மோசமான போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்.! வைரலாகும் புகைப்படம்

இந்த விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  Trailer of Salman Khan's action thriller "TIGER ZINDA HAI" was released online on Tuesday.

இந்த உத்தரவு வாக்குப்பதிவு எந்திர மோசடி தொடர்பான பிரச்சனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என நாடுமுழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.