Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவுக்கு 45 லட்சம் மதிப்பான காரை பரிசாக கொடுத்த அம்மா உஷா ராஜேந்தர்- போட்டோ உள்ளே

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. சிலம்பரசன் டு சிம்பு டு STR என மனிதர் ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ற மாதிரி மாறினார்.

நடிகைகளுடன் காதல், ஷூட்டிங் செல்வது இல்லை, அங்கிள் மாதிரி அதீத குண்டு என முன்பு இவர் பல மைனசுகளில் சிக்கினாலும் தற்போது தோற்றத்தில் மட்டும் மாற்றத்தை கொடுக்காமல் செயலிலும் மாற்றத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

ஈஸ்வரன் ரிலீசுக்கு ரெடி. ஒரு மாதத்தில் ஷூட்டிங் சாத்தியமா என யோசித்த நேரத்தில் முழு ஷூட்டிங் முடிந்தது. அக்டோபர் 10 ஷூட்டிங் ஆரம்பம். நவம்பர் 6 ஷூட் முடிந்தது, நவம்பர் 8 டப்பிங் முடித்துவிட்டார் சிம்பு ஈஸ்வரன் படத்திற்கு. டீசரும் தீபாவளி முன்னிட்டு வெளியானது. அடுத்து மாநாடு பட ஷூட்டிங் சென்று விட்டார். போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்நிலையில் உஷா ராஜேந்தர் தன்னுடைய செல்ல மகனுக்கு சொகுசு காரை பரிசாக வாங்கி தந்துள்ளார். நீண்ட நாளாகவே சிம்புவின் கணவனு கார் மினி கூப்பர், அதன் போட்டோ இதோ. பேசிக் மாடல் கார் விலையே 40 லட்சம் தாண்டுமாம்.

strs mini cooper

ஏற்கனவே நம்பர் 9 ராசி சமீபகாலமாக சிம்பு பார்த்து வர, தற்பொழுது இந்த பச்சை கலரும் ஜோசியர் ஐடியா தான் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

Continue Reading
To Top