Connect with us
Cinemapettai

Cinemapettai

Thupparivalan-cinemapettai.jpg

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சண்டை போட்டாலும் சரக்கு வேண்டும். எனிமி என்ன சொல்லப் போகிறாரோ?

தமிழ் சினிமாவிற்கு உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய விஷால், முதல் முதலாக ‘செல்லமே’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த விஷால் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் துப்பறிவாளன். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிய மிஸ்கின் லண்டனில் படமாக்கிக் கொண்டிருந்தார்.

அந்தப் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பியவுடன் மிஸ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மிஸ்கின் துப்பரிவாளன்2 படத்தை இயக்க மறுத்து விட்டார். அதன் பிறகு விஷால் அந்தப் படத்தை  இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்த சமயம் சக்ரா படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துப்பின் துப்பரிவாளன்2 படத்தை தொடங்கலாம் என்று விஷால் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்.

தற்போது அதற்கான நேரம் வந்த விட்டது, வரும் ஜனவரி மாதத்தில் விஷால் இயக்கவுள்ள துப்பறிவாளன்2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் லண்டனில் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் துப்பறிவாளன்2 படத்திற்கான போஸ்டர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட்டானது.

இந்த போஸ்டரில் விஷால் மேப் ஒன்றில் அமர்ந்தபடி உன்னிப்பாக மேப்பை கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார். இந்த போஸ்டரை மிஸ்கின் டிசைன் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

thupparivalan2

thupparivalan2

மிஸ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் மோதல் வெடித்தாலும் மிஸ்கின் ஐடியாவை விஷால் பயன்படுத்த தயங்கவில்லை. ஏனென்றால் சண்டை போட்டாலும் சரக்கு வேண்டுமல்லவா!

எனவே ஜனவரி மாதம் துவங்ப்படும் துப்பரிவாளன்2 படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் முடிக்க விஷால் திட்டமிட்டுள்ளார். அத்துடன்  முதல் முதலாக விஷால் இயக்கவுள்ள துப்பறிவாளன்2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Continue Reading
To Top