urvasi

பிரபல நடிகைகள் படங்களில் குடிப்பதை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் குடிப்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகை ஊர்வசியை சொல்லலாம்.

அண்மையில் கூட அவர் நடுரோட்டில் குடித்துவிட்டு ஒருவரிடம் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தனக்கு குடிப்பழக்கம் வந்ததே தனது முன்னாள் கணவரும், நடிகருமான மனோஜ் கே ஜெயன் தான் என்று கூறியுள்ளார்.

மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் ஊர்வசி பேசும்போது, மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள். அவர்களால் தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது என கூறியுள்ளார்.