1994ம் ஆண்டு ரஹ்மான் இசையில் வெளியான பாடல் “ஊர்வசி ஊர்வசி”… ஷங்கரின் “காதலன்” படத்தில் வைரமுத்துவின் வரிகளுடன் இடம்பெற்றிருந்த இப்பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களுக்கு இன்றும் இளமை பெருக்களிக்கும் பாடலாக இருந்து வருகிறது.

அதற்கு அடுத்த ஆண்டு ஹிந்தியில் “Humse Hai Muqabla” என மொழி மாற்றம் செய்யப்பட்டு இப்பாடம் சக்கை போடு போட்டது எனலாம்.

இந்நிலையில், ஊர்வசி ஊர்வசி பாடலை மீண்டும் பழைய துள்ளல் இசையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் ரீமேக் செய்துள்ளார்.

பாடலை தனது புதிய தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் புத்துயிர் ஊட்டும் வகையில் சில வரிகளை கூறுமாறு தனது ரசிகர்களுக்கு ரஹ்மான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புதிய பாடல் வரிகளை எழுதி அவரது முகநூல் பக்கத்தில் கமெண்ட் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here