உள்ளூர் பிரச்சனைகளை குறித்து படம் எடுத்தால்தான், அவை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என உரியடி படத்தின் இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள சாதிப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளிவந்த உரியடி திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம், போலாந்து பல்கலைகழகத்தில் நடைபெறும் விழா ஒன்றில், திரையிடப்பட்டுள்ளது. இது உரியடி படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

அதிகம் படித்தவை:  பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது... நடிகர் யார் தெரியுமா?

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உரியடி படத்தின் இயக்குநர் ராஜ்குமார், உள்ளூர் பிரச்சனைகள் குறித்து படம் எடுத்தால்தான் ,அது சர்வதேச தரத்தைப் பெறும் என தெரிவித்துள்ளார். “பதேர் பாஞ்சாலி திரைப்படம் இந்திய சினிமாவின் முகத்தை உலகத்துக்கு புரிய வைத்தது.குட் பை லெனின் திரைப்படம் ஜெர்மனி சினிமாவின் முகத்தை உலகிற்கு புரிய வைத்தது. எல்லா படங்களிலும் அடிப்படையும் அவர்கள் மண் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அதிகம் படித்தவை:  ரகுவரனுடன் நடிக்காத ஒரே பிரபல நடிகர் யார் தெரியுமா ? - நினைவு நாள் பகிர்வு

போலந்து பல்கலைகழகத்தில் எனது திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது, போலந்து அரசு எனக்கு அளித்த கெளரவமாக நான் கருதுகிறேன் .” மொத்த ஐரோப்பாவும் தற்போது வலதுசாரி சிந்தனை பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உரியடி படம் திரையிடப்படுவது சிறப்பானதாக அமையும்” என எனது நண்பர் கூறியதை, பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உரியடி திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என விஜய் குமார் தெரிவித்துள்ளார்.