Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.
தமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார் தயாரித்து, நடித்து, இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு அடைந்தது.

Uriyadi-2
உறியடி 2
உறியடிக்கு மக்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் மனம் நிறைய நன்றியோடு, அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறோம். மக்களின் மேல் பேரன்பு கொண்ட சூர்யா சாரின் 2D நிருவனத்துடன் இணைவதில் பெரும் மகிழ்ச்சி @2D_ENTPVTLTD @Suriya_offl @rajsekarpandian https://t.co/yPdEzskrZ5
— Vijay Kumar (@Vijay_B_Kumar) September 20, 2018
இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் வாயிலாக தயாரித்துள்ளார். இதிலும் விஜய்குமாரே கதையின் நாயகனாக நடித்து, இயக்கியுள்ளார். கோவிந்த் வஸந்தா இசை. இதற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். எடிட்டராக லின்னு பணியாற்றியுள்ளார்.
இந்த முதல் லுக்கை சூர்யாவே தன் ட்விட்டர் பக்கத்தில் மாலை நான்கு மணிக்கு வெளியிட்டார்.
