செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

என்னது! சுந்தரபாண்டியன் படத்துல நம்ம ராக்கி பாயா? ஷாக்கான ஃபேன்ஸ்

கன்னட சினிமா உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த படம் ராக்கி பாய் என்று அழைக்கப்படும் யாஷ் நடித்த கேஜிஎஃப். முதல் பாகமே அதிரடி ஆக்சன், சூப்பர் ஹிட், பல கோடி வசூல்ன்னு ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுமே அப்படத்தை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுனாங்க.

அதன்பிறகு 2 வது பாகமும் யாஷின் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில வெளியாகி அதுவும் மாஸ் ஹிட். முதல் பாகத்திலயே பான் இந்தியா ஸ்டாராக மாறிய யாஷி ஒவ்வொரு மொழியிலையும் முன்னணி ஹீரோக்கள் மாதிரி அவரையும் ஹிரோவாக ஏத்துக்கிட்டாங்க. இப்படம் ரூ.1200 கோடி வசூலிச்சது.

இது கன்னட சினிமா வசூலில ஒரு பெஞ்ச் மார்க். ஆனால், அவரு இந்த இடத்துக்கு சூப்பர் ரேஞ்சுக்கு உயரும் முன்னே பல படங்கல்ல நடிச்சி, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறி இருக்காரு. கேஜிஎஃப் படம் தான் யாஷை இந்தியா முழுவதும் கொண்டு போச்சு.

சுந்தரபாண்டியன் பட கன்னட ரீமேக்கில் யாஷ்!

அதுக்கு முன்னாடி பல படங்களில் ஹீரோவாக நடிச்சிருந்தாலும் கதை நல்லா இருந்தாலும் அதிரடி ஆக்சனில் யாரும் கொண்டாடுர மாதிரி அவருக்கு அமையலன்னு சொல்றாங்க. ஆனால் தமிழ்ல சசிக்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சுந்தரபாண்டியன் படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருந்தாங்க. இது விஜய் சேதுபதி வில்லனா நடிச்சிருந்தாரு.

இந்தப் படத்தோட கன்னட ரீமேக்குல நம்ம ராக்கி பாய் ஹீரோவா நடிச்சிருக்காரு. இப்படத்தை குருதேஷ் பாண்டே இயக்க, ஹம்சலேகா இசையமைச்சிருந்தாரு. இப்படம் 2013 ஆம் வருஷம் வெளியாகி அங்கேயும் சூப்பர் ஹிட்டு. இப்படம் ரூ.12 கோடி வசூலிச்சதா சொல்றாங்க.

யாஷ் அப்போவே ஹிட் படம் கொடுத்தாலும், ராக்கி பாயா மாறி ரூ.100 கோடிக்கு மேல ஹிட்டு கொடுத்தும், 1000 கோடி வசூலிச்சதும் கேஜிஃப் படங்கிறதால அவரோட பழைய பட போஸ்டரை பார்த்தாலே அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே அப்பிடீன்னு ஃபேன்ஸ் பேசிக்கறாங்க.

- Advertisement -

Trending News