Tamil Cinema News | சினிமா செய்திகள்
2021 புத்தாண்டிற்குள் வெளிவர உள்ள சூர்யாவின் 40வது படம்.. புது கூட்டணி கைகொடுக்குமா?
தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும் தனது அயராத உழைப்பினால் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரது 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது நாம் அறிந்ததே.
தற்போது இந்த படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் பற்றிய தகவலும், படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள சூர்யாவின் நாற்பதாவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது.
ஏற்கனவே பாண்டிராஜ், சூர்யா கூட்டணியில் உருவான ‘பசங்க 2’ படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தார். ஆனால் தற்போது பாண்டிராஜ் இயக்கவிருக்கும் 10வது திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் சூர்யா.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி இறுதிக்குள் முடிந்து விடுமாம். மேலும் 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தை வெளியிட போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சூர்யா, ஞானவேல் இயக்கத்தில் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இவ்வாறு அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யாவின் திரைப்படங்களை காண அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
