Connect with us
Cinemapettai

Cinemapettai

arun-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பழைய சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி சேரும் அருண் விஜய்.. படத்தின் பெயரே தாறுமாறு.. அதுவும் டாப் ஹீரோயினுடன்!

தமிழ் திரையுலகில் பின்புலத்துடன் கதாநாயகனாக அறிமுகமாகி மிகபெரிய போராட்டத்திற்கு பிறகு தற்பொழுது முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய்.

மேலும்  அருண் விஜய் ஆரம்பத்திலிருந்தே சினிமா துறையில் இருந்தாலும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘தடையற தாக்க’ என்ற படம்தான். இதனைத் தொடர்ந்து தான் அஜித்துக்கு வில்லனாக ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தில் பட்டைய கிளப்பி இருப்பார் அருண்விஜய்.

ஹீரோவை விட சில படங்களில் வில்லனுக்கு நல்ல மவுசு இருப்பதை புரிந்து வைத்துள்ளார் அருண்விஜய். அதனால் தற்போது பல படங்களில் ஹீரோ வில்லன் என மாறி மாறி சிறப்பாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கவுள்ள புது படத்தை பற்றிய அப்டேட்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. தியேட்டர்களில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் OTT-யில் மக்கள் அனைத்துவிதமான படங்களையும் பார்த்து வருகின்றனர். இது வளர்ந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது.

அருண் விஜய் ‘என்னை அறிந்தால்’ திரைபடத்தில் நடித்தது முதலே தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.  தற்போது அருண் விஜய்யின் நடிப்பில் ‘பாக்ஸர்’ என்ற திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு தயாராகி உள்ளதாம். அதற்குத்தான் முரட்டுத்தனமா உடம்பை ஏற்றி வந்தார்.

இவ்வாறிருக்க அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். இந்த அறிவழகன் வேற யாரும் இல்லை ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கிய டைரக்டர்.

மேலும் ‘பார்டர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹீரோயினாக ரெஜினா நடிக்கவுள்ளாராம். எனவே, அருண் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் இந்த புதிய படத்தின் அப்டேட்களால் அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

arun-vijay-cinemapettai

arun-vijay-cinemapettai

Continue Reading
To Top