Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்து OTTயில் வரிசை கட்டி நிற்கும் 8 பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள்.. உச்சகட்ட கோபத்தில் தியேட்டர் ஓனர்கள்!
கொரானா என்ற ஒன்று சினிமாவை தலைகீழாக மாற்றி விட்டது என்றே சொல்லலாம். சினிமாவை மாற்றிவிட்டது என்று சொல்வதை விட சினிமாவை தியேட்டர்களில் ரசித்த ரசிகர்களின் எண்ணத்தை மாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
முன்னணி நடிகரின் படங்களை தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து விசிலடித்து கொண்டாடி என்ஜாய் பண்ணிய நாட்கள் இனி வருமா என்பது சந்தேகம்தான். அப்படியே வந்தாலும் இன்னும் சில வருடங்கள் ஆகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இதற்கிடையில் ஏற்கனவே எடுத்து வைத்த திரைப்படங்களுக்கு வட்டி கட்ட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களது படங்களை OTTயில் வெளியிட தயாராகி வருகின்றனர். முன்னணி நடிகர்களின் படங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஆரம்பத்தில் கண்டிப்பாக தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் என உறுதியாகக் கூறிய சூர்யா, அவரது மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த சூரரைப்போற்று படத்தை அமேசான் நிறுவனத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப் போகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதை மாஸ்டர் படக்குழு இன்னும் சொல்லவில்லை. அவ்வளவுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம். மேற்படி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் மாஸ்டர் படத்தை பெரும் விலைக்கு விற்று விட்டதாக தெரிகிறது. அமேசன் நிறுவனமும் மாஸ்டர் படத்தை வாங்க போட்டி போடுகிறார்களாம்.
விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் ஜகமே தந்திரம், விஷாலின் சக்ரா, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவி(25th)யின் பூமி, நீண்ட நாட்களாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நரகாசுரன், எஸ் ஜே சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் இறுதியாக மாதவன், அனுஷ்கா நடித்த சைலன்ஸ் போன்ற படங்களின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டதாம்.

upcoming-OTT-Release
இதையெல்லாம் நீங்கள் நம்பவில்லை என்றாலும் இதுதான் நிஜம் என்பது கூடிய விரைவில் தெரிய வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
