Connect with us

Cinemapettai

லிஸ்ட் ரெடி.. போன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. பயத்தில் உளறிய வாலிபர் ஆடியோ

website-list

Tamil Nadu | தமிழ் நாடு

லிஸ்ட் ரெடி.. போன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. பயத்தில் உளறிய வாலிபர் ஆடியோ

பாலியல் ரீதியான பிரச்சனைகள் சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக ஆபாசப்படம் பார்ப்பவர்கள் இருப்பதாகவும், முக்கியமாக தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமாக குழந்தைகள் சம்பந்தபட்ட வீடியோக்களை பார்த்து அதை டவுன்லோட் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு தகவலை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டது.

இதனால் காவல் துறையினர் 3 ஆயிரத்திற்கும் மேலானோர் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளன என்று பரபரப்பான செய்தி வெளியானது.  இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி ஆபாச படம் பார்த்து சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவது போன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், காவல்துறை அதிகாரி அந்த வாலிபரிடம் நீ ஆபாச வீடியோவை பார்த்து இருக்கிற , எதற்காக பார்த்த? உங்க அப்பா நம்பர் கூடு என்று கேள்வி கேட்டுள்ளார். எவ்வளவு மணி நேரம் அந்த வீடியோவை நீ பார்க்கிறாய்? இது போன்ற தவரான செயலில் ஈடுபட்டதாக 7,000 ரூபாய் அபராதம் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த அபராதத்தை கட்ட வில்லை என்றால் கைது செய்து 5 ஆண்டு சிறைத் தண்டனை என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த நபர் பீதியில் நேற்று தான் நான் வீடியோ பார்த்தேன் 15 நிமிடம் பார்த்தேன் எனது தந்தை வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கும் காவல்துறை தயவுசெய்து வெப்சைட்டுகளை முழுமையாக தடை செய்தால் மாணவர்கள் சீரழிவை தடுக்கலாம்.  இது எப்படி இருக்கு என்றால் ஆயிரக்கணக்கில் ஒயின்ஷாப் திறந்து வைத்துக்கொண்டு குடிப்பவர்களை வாகனத்தில்  அருகிலேயே செல்லும் போது பிடித்து அபராதம் விதிப்பது போல் உள்ளது.

இது அவர்களுக்கே தெரியும், ஆனாலும் நமது அரசு உடனடியாக இதற்கு மாற்று நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு மகிழ்ச்சி தான். அனைத்து ஆபாசப்பட வெப்சைட்டுகளை 100% முடக்கினால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு துரிதமாக பாலியல் சீர்கேடுகளை தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top