அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர் என்று யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதனால் இதுபோன்ற பத்திரப்பதிவுகளை தடுக்கவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இ்ந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் பின்னர் உத்தரவு தளர்த்தப்பட்டது.

அந்த உத்தரவு தொடரும் என்றும் வழக்கின் இறுதி விசாரணை மே 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அரசின் வரைவு விதிகளை அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இடைக்கால தளர்வை நீக்கக்கூடாது என்று ரியல் எஸ்டேட் தரப்பினர் விடுத்த கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.