திருமண வயது தாண்டியும் முத்தின கத்திரிக்காவாக வலம் வரும் 8 நடிகைகள்.. நீங்க சொல்ற காரணம் நம்பர மாதிரியே இல்ல

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகள் திருமண வயதை தாண்டியும் ஒரு சில காரணங்களால் துணை இல்லாமல் தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தற்போது வரை திருமணம் தடைபட்டு வருவதற்கு என்ன காரணம் என்பதை அவர்களே ஒரு சில பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

அனுஷ்கா: ஆரம்ப காலத்தில் யோகா பயிற்சி கொடுக்கும் ஆசிரியையாக இருந்துள்ளார். அதற்குப்பின் தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார் அனுஷ்கா. இவருக்கு தற்போது 39 வயது ஆகியும் மாப்பிள்ளை கிடைக்காமல் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே பாகுபலி பிரபாஸ் உடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சதா: அந்நியன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சதா. இவர் சரக்கு, தம்மு என்று சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்காக தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இவருக்கும் கிட்டத்தட்ட 37 வயது தாண்டி விட்டது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

பிந்து மாதவி: சினிமாவை விட பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் பிந்து மாதவி. சின்ன சின்ன படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்காக தற்போது வரை போராடி வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்கு விருப்பம் இல்லையாம். இவருக்கு கிட்டத்தட்ட 35 வயதைத் தாண்டிவிட்டது.

bindhumadhavi-cinemapettai
bindhumadhavi-cinemapettai

ரம்யா நம்பீசன்: குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி போன்ற படங்களின் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரம்யா ரம்யா நம்பீசன் இவர் நடிப்பை தாண்டி பாடுவதில் திறமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 35 வயதாகியும் தற்போது வரை மாப்பிள்ளை கிடைக்க வில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

பிரியா ஆனந்த்: நேர்த்தியான கதாபாத்திரத்தை எடுத்து வெற்றி பெறுவதில் திறமை வாய்ந்தவர் பிரியா ஆனந்த் இவருக்கு தற்போது வயது 34 இவருக்கு காதல் தோல்வி மற்றும் அதர்வாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டார் தற்போது நடிப்புதான் முக்கியம் என்று திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டாராம் பிரியா ஆனந்த்.

பூர்ணா: முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூர்ணா. இவருக்கு வயது 32 ஆகிறது திருமணத்தில் மேல் உள்ள வெறுப்பினால் தற்போதுவரை மாப்பிள்ளை வேண்டாம் என்று விலகி இருக்கிறாராம் பூர்ணா.

poorna
poorna

வாணி போஜன்: சீரியல் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்த வாணிபோஜன் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து வெற்றி பெற்று வருகிறார் வாணி போஜன் தற்போது சினிமா நடிப்புதான் முக்கியம் என்று திருமண வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாராம் இவருக்கும் வயது 32 ஆகிவிட்டது.

திரிஷா: 1999 முதல் தமிழ் சினிமாவை தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா இவருக்கு 38 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் ஆகவில்லை என்பதுதான் பெரும் ஆச்சரியம். சிம்பு ராணா போன்ற பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டது தற்போது வரை திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளாராம்.