இளம் பாடகிக்கு பா**ல் தொல்லை கொடுத்த நபர்கள்.. அதிரடி முடிவெடுத்த பாடகி

திரைத்துறையில் பலரும் தங்களுக்கு நடக்கும் அவலங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். அப்படி பிரபல பாடகியான ஒருவருக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் பா**ல் தொல்லை கொடுத்ததாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் இளம் பாடகியாக பிரபலமடைந்து வருபவர் பாடகி மது பிரியா. இவர் டக்கரங்கா தூரங்க, பீடா, டச் சேசி சுடு, நேலா டிக்கெட் சாக்ஷயம் மற்றும் சரிலெரு நீக்கெவுரு போன்ற படங்களில் பாடல் பாடியுள்ளார்.

அதிலும் மகேஷ்பாபு மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சரிலெரு நீகேவரு படத்தில் இடம்பெற்ற “ஹி சோ க்யூட்” இணையத்தில் படு வைரலாகி பிரபலமாயின.

madhu priya
madhu priya

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பாடகி மது பிரியா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பது, அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்கள் வெளியீடு போன்ற சேட்டைகளை செய்து வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் மது பிரியாவின் மொபைல் நம்பரை கண்டறிந்து தொடர்ந்து அவருக்கு பா**ல் தொந்தரவுகளை கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தவறான முறையில் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற கேவலமான செயல்களை செய்த மர்ம நபர்களை மது பிரியா பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் மர்ம நபர்கள் தொடர்ந்து மது பிரியாவை தொந்தரவு செய்ததால் அந்த தொலைபேசி எண்கள் உடன் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது போலீசார் அந்த மர்ம நபர் யார் என்பதை வலைவீசி தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தைரியமாக மது பிரியா செய்த செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News