நெல்லை : நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அமைத்த பகுதியின் வானத்தில் நேற்று மர்ம பொருள் சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு 10 மணியில் இருந்து 10.30 மணிவரை விமானம் போன்ற மர்ம பொருள் ஒன்று வெளிச்சத்துடன் 3 முறை சுற்றி வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள், அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இந்த மர்ம பொருள் பறந்த பகுதியின் அருகில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கிறது. இதனால் அந்த ஆராய்ச்சி மையத்தின் பாதுகாப்பை உறுதி படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  முன்னாடி உன் மூஞ்சி பிடிக்காமதான் பின்னாடி சுத்தி சுத்தி வரோம்.! ஜி.வி பிரகாஷின் செம படத்தின் ட்ரைலர்.!

இதே போல கடந்த 2015-ம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மர்ம பொருள் ஒன்று சுற்றி வந்தாக பொதுமக்கள் புகார் அளித்தனர் . அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த மர்ம பொருளை தேடும் பணியில் ஈடுப்பட்டார்.ஆனால் போலீசாரின் சோதனையில் எந்த வித மர்ம பொருளும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.