Chris Gayle

11 வது ஐபில் சீஸனின் 16 வது போட்டியில் நேற்று முன்தினம் இது வரை தோல்வியை சந்திக்காத ஹைதெராபாத் அணியும் பஞ்சாபும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். 20 ஓவரில் பஞ்சாப் அணி 193 ரன்கள் எடுத்தது. 63 பந்தில் 104 ரன்கள் எடுத்து, இறுதிவரை நாட் அவுட் ஆக இருந்தார் கெயில். பஞ்சாப் அணி போட்டியை எளிதில் வென்றது.

கெயில் புயல்

பஞ்சாப் அணி நிர்வாகம், யூனிவேர்சல் பாஸ் ஆன கிறிஸ் கெயிலை ஏன் அவர்களின் முதல் இரண்டு போட்டியில் சேர்க்கவில்லை என்பது தான் புரியாத புதிர். ஞாயிறு அன்று நடந்த சிஎஸ்கே போட்டியில் ஸ்டானிஸ்க்கு பதிலாக கெயில் இறங்கினார். அப்போட்டியில் அரை சத்தம் (63 ரன் ) அடித்தார் கெயில் , நேற்று முன்தினம் சதம் அடித்து அசத்தினார். தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

விலைபோகாத கெயில்

இந்த வருட ஐபில் ஏலத்தில் கெயிலை எந்த அணியும் எடுக்க முன் வரவில்லை. இரண்டாவது முறையாக அவர் ஏலத்துக்கு வந்த பொழுது. பஞ்சாப் அணி, அவரை பேஸ் விலையான 2 கோடிக்கு எடுத்தார்கள். வீரேந்திர சேவாக் தான் முக்கிய காரணம். மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் வயதாகிவிட்டது என்பதே இவரை பல அணிகள் இவரை தவிர்த்தனர்.

Chris Gayle – KXI Punjab
கெயில் பேட்டி

போட்டி முடிந்த பின் கெயில் சில விஷயங்களை பற்றி பேசினார். அதன் சாராம்சம் இதோ …..

‘உலகில், எந்த அணிக்காக நான் ஆடினாலும் அந்த அணிக்காக
100 சதவிகித அர்ப்பணிப் போடுதான் விளையாடுகிறேன். நேரம் யாருக்காகவும் காத்திருக்காது. நான் ஆரம்பம் முதலே சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தேன். முதலில் நான் ஏலத்தில் எடுக்கப்படவில்லை, பலர் நான் என் திறமையை நிரூபித்து காட்டவேண்டும் என்று கூறினார்கள். நான் யாரிடமும் நிரூபித்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான் இதற்கு முன்பும் பல முறை இவ்வாறு ஆடியுள்ளேன்.”

#ChrisGayle #prietyzinta

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இது அருமையான தொடக்கம், அடுத்தடுத்து மேன் ஆப் தி மேட்ச் விருதுகள். மேலும் வீரேந்திர சேவாக் ஒரு பெட்டியில் கூறும் பொழுது கிறிஸ் கெயில் எங்கள் டீமுக்கு 2 போட்டிகளை வெற்றிப்பெற்றுக்கொடுத்தால், நாங்கள் அவருக்கு கொடுத்த பணத்துக்கு ஈடாகிவிடும் என்று கூறியிருப்பது பற்றி நான் அவரிடம் பேச இருக்கிறேன். என்னை ஏலத்தில் எடுத்திருப்பதன் மூலம் ஐபிஎல்-லை காப்பாறியிருக்கிறார் சேவாக்.

இந்தப் போட்டியில் நூறு சதவிகிதம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறேன் . காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாளை எனது மகளுக்குப் பிறந்த நாள். அவளுக்கு இந்த சதத்தை சமர்ப்பிக்கிறேன். அவளுடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்.” என்றார்.

மேலும் சீஸனின் தொடக்கத்திற்கு முன்பு சேவாக் உங்கள் ஸ்டைலில் ஆடுங்கள் என்றும், பிட்னெஸ் முக்கியம் அதற்க்கு நேரத்தை செலவிடுங்கள், மற்றும் யோகா, மசாஜ் இரண்டையும் கண்டிப்பாக செய்லபடுத்துமாறு கெய்லிடம் கூறினாராம்.