Tamil Cinema News | சினிமா செய்திகள்
விசித்திரமான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படும் மனித உடல் உறுப்புகள்!
விந்து சேர்த்து சமைக்கும் உணவுகள், மலத்தை பர்கரில் இறைச்சியுடன் சேர்த்து வைத்த ஆராய்ச்சியாளர்கள், அழுக்கு கொண்டு மெழுகுவர்த்தி என மனித உடல் பாகங்களில் இருந்து இறந்து வெளியேறும் பலவற்றை கொண்டு விசித்திரமான வழிகளில் பலர் பயன்படுத்தியுள்ளனர். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்….
விந்து!
விந்து என்பது ஆணின் உடலில் இருந்து வெளிப்படும் செக்சுவல் திரவம். இது பெண்ணின் கரு முட்டையுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்ய பயன்படுகிறது. ஆனால், ஆண்களின் விந்தை லண்டன், அமெரிக்கா போன்ற பகுதிகளில் உணவுகளில் சமைக்க பயன்படுத்தவும் கூட உபயோகம் செய்கிறார்கள்.
பல சமையல் குறிப்பு புத்தகங்களில் விந்து சமைக்கும் பொருளாக சேர்க்கப்படுகின்றன. “Natural Harvest: A Collection of Semen-Based Recipes” பெயரில் விந்து சேர்த்து சமைக்கும் உணவு புத்தகமே இருக்கின்றன. சாஸ், குடி பானங்கள் என பலவற்றை இதை சேர்த்து சமைக்கின்றனர்.
காது அழுக்கு!
காதில் பாக்டீரியா தோற்று அதிகரிக்காமல் இருக்கவும், காதின் ஆரோக்கியத்தை காக்கவும் தான் “Ear Wax” எனும் காதில் சேரும் அழுக்கு பயன்படுகிறது. ஆனால், உலகின் சில பகுதிகளில் இந்த அழுக்கை கொண்டு மெழுகுவர்த்திகள் செய்கின்றனர்.
நஞ்சுக்கொடி!
நஞ்சுக்கொடியானது கரு வளர உதவும் உன்னதமான உறுப்பு. இதன் வழியாக தான் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்களும், ஆக்சிஜனும் செல்கிறது. ஆனால், சில விசித்திர மனித ஜென்மங்கள், குழந்தை பிறந்த பிறகு இதை சமைத்து உண்கின்றனர்.
சிறுநீர்!
உடலில் இருந்து வியர்வையாக, மலமாக, சிறுநீராக தேவையற்றவை வெளியேற்றப்படுகின்றன. இதில் சிறுநீரை சில பீர் கம்பெனிகள் தயாரிப்பு செயற்பாட்டின் போது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
மாதவிடாய் இரத்தம்!
கருத்தரிக்காத கரு முட்டை மாதாமாதம் மாதவிடாய் காலத்தில் வெளியேறிவிடும். இந்த இரத்தத்தை சிலர் தோட்டத்தில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாக போடுகின்றனர். இதில் இருக்கும் நைட்ரஜன் தாவரங்கள் வளர முக்கியமாக தேவைப்படும் ஒரு மூலக்கூறாகும்.
கூந்தல்!
மொட்டை அடிக்கும் கூந்தல், ஹேர்கட் செய்யப்படும் கூந்தல்கள், செயற்கை முடிகளாக நட்டு வைக்க, விக் மற்றும் வேறு சில கூந்தல் சார்ந்த அலங்கார பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
எலும்புகள்!
மனிதனின் ஆரோக்கியத்திற்கு, வலுவிற்கு ஆதாரமே எஎலும்பும், தசையும் தான். இதில் எலும்புகளை வைத்து சில பழங்குடி இன மக்கள் வாத்தியங்கள் செய்து வாசிக்கின்றன. ஆப்ரிக்காவில் இதை அதிகமாக காணமுடிகிறது.
பல்!
பற்கள் உணவுகளை நன்கு அரைத்து உண்ண உதவுகிறது. 2015ல் கேனடாவை சேர்ந்த ஒரு நபர் தனது வருங்கால மனைவிக்கி வைரம், நவரத்தினங்கள் பதித்த மோதிரத்திற்கு பதிலாக, தனது பல் பதித்த மோதிரத்தை பரிசளித்தார்.
நகங்கள்!
நகங்களும் ஒருவகையில் உடலில் இருந்து வெளியேறும் அழுக்கு அல்லது இறந்த செல்கள் என கூறலாம். இதை வைத்து சில கற்பனை திறன் வாய்ந்த கலைஞர்கள் நக கிளிப், சின்ன, சின்ன அளவிலான மிருக பொம்மைகளை செய்கின்றனர்.
மலம்!
மலம் தினமும் உடலில் இருந்து வெளியேறும் தேவையற்ற ஒன்று. இதை 2011ல் ஜப்பானை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர்கள் மலத்தை இறைச்சியுடன் ஒன்றிணைத்து அதை பர்கரில் சேர்த்து சமைக்க ஒரு வழியை கண்டுபிடித்தனர். டோக்கியோவில் மனித கழிவுகள் அதிகமாக சேர்வதால் இந்த யோசனைக்கு ஆராய்ச்சியாளர்கள் தள்ளப்பட்டனர்.
