Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்.. இந்த வார தலைவராக மக்கள் மனதை வென்றவர் தான்!
சினிமாவை தாண்டி மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்4 மாறி வருகிறது.
அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் ஒதுக்கப்பட்ட ஆரிக்கு, பெரும்பாலான போட்டியாளர்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இப்படி திடீரென்று பல்டி அடித்தற்கு காரணம் என்னவென்றால் பாலாஜி, சம்யுக்தா மீது ஏற்பட்ட கோபமாக தெரிகிறது.
ஏனென்றால் சென்ற வாரம் சம்யுக்தாவை தலைவராக்க வேண்டும் என்று பாலாஜி செய்த செயல்தான் தற்போது எதிரொலிக்கிறது.
அதேபோல் அடுத்த வாரம் நடைபெற போகும் தலைவர் போட்டிக்கும் நிஷா, ஆரி, சோம் ஆகியோரை தேர்வு செய்தனர். ஆனால் இதற்கு சம்யுக்தாமும் பாலாவும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

bigboss-season4-cinemapettai
இதனால் கடந்த இரண்டு வாரமும் ஜெயிலில் அடைக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் ஒதுக்கப்பட்ட ஆரிக்கு, இந்த வாரம் தலைவராக்க சக போட்டியாளர்கள் அதிக ஆதரவு தெரிவித்தது, பிக்பாஸ் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
