Connect with us
Cinemapettai

Cinemapettai

rennuka-janani-cenimapettai

India | இந்தியா

குணசேகரனை எதிர்த்துப் பேசும் சில்லு வண்டு.. எதிர்நீச்சலில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்

குடும்பத்தின் முன் மானத்தை வாங்கிய தாரா உச்சகட்ட கோபத்தில் குணசேகரன்.

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு எதிராக குடும்பத்தில் உள்ள அனைவருமே சரவெடியாய் வெடிக்க தொடங்கியுள்ளனர். அதிலும் குடும்பத்தில் உள்ள சில்வண்டுவரை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு இவரின் அகங்காரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு உறுதுணையாக இருந்த  தாயாரும் தம்பி வீட்டிற்கு நடையை கட்டியுள்ளார்.

தனது தொழில் போட்டியின் எதிரியை அழிப்பதற்கு முழு வீச்சில் இறங்கியுள்ள இவர், தான் என்ற அகங்காதரத்தில் இருந்து வருகிறார். இதனை அடுத்து பெண்களை மதிப்பதில் ஜீரோவாக இருக்கும் இவரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்பொழுது வரை இவரின் கீழ்த்தரமான பேச்சுக்களை சகித்து வந்த அனைவரும் தற்பொழுது திமிரும் காளை போல் இவருக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.

Also Read: படத்துல வர காசு சும்மா, சீரியலில் அதிகமா சம்பாதிக்கும் 5 பிரபலங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் குணசேகரன்

குடும்பத்தில் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று மருமகள்களை ஒவ்வொரு விதத்திலும் துன்புறுத்தி வந்தனர். சமூகத்தில் ஆண்களுக்கு மட்டுமே அனைத்து உரிமைகளும் உள்ளது என்ற எண்ணத்தில் இருந்து வருகின்றனர். தற்பொழுது அண்ணனின் சுயபுத்தியை தெரிந்து கொண்ட ஞானசேகரன் பெண்களை மதிக்கக் கூடிய ஒருவராக  மாறியுள்ளார்.

இந்நிலையில் அண்ணனுடைய நிழலிலேயே இருந்து வந்த ரேணுகாவின் கணவருக்கு, அடுத்து என்ன செய்வது என்ற தடுமாற்றம் நிறைந்த மனநிலையிலேயே இருந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது மகளின் ஆசையை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க ரேணுகா இதுபோன்ற பேச்சுக்களை எல்லாம் கேட்டு மானத்தை விட்டு இந்த வீட்டில் வாழ வேண்டுமா என்று மன வருத்தத்தில் இருந்து வருகிறார்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஆனால் மூத்த அண்ணன் மற்றும் கதிரேசனைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும், ஐஸ்வர்யாவின் ஆசையைநிறைவேற்றுவதில் உறுதுணையாக இருந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் யாரை கேட்டு செய்கிறீர்கள் என்று ஒரு மல்லுக்கு நிற்கிறார் குணசேகரன். இதற்கு இடையே கதிரின் சுட்டி மகள் ஆன தாரா தனது பெரியப்பாவை எதிர்த்து பேசியுள்ளார். அதிலும் நீங்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கும் நாங்கள் வாழும் சூழ்நிலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்று பொட்டில் அடித்தது போல் பேசியுள்ளார்.

இந்நிலையில் மாற்றங்களுக்கு ஏற்றார் போல மாறிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் எதிலும் மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி நிற்க வேண்டும். இவ்வாறான பதிலை ஈஸ்வரி தனது கணவருக்கு தக்க பதிலடியாக கொடுத்துள்ளார். போற போக்கை பார்த்தால் குணசேகரன் தனது ஆணவத்தாலே அழிந்து தனி மரமாக நிற்கப் போகிறார் என்று தெளிவாக தெரிகிறது.

Also Read: அஜித்துடன் ஜோடி போட்டு சீரியல் நடிக்கும் 5 அம்மணிகள்.. எதிர்நீச்சல் ஈஸ்வரியாக மாஸ் காட்டும் வரலாறு கனிகா

Continue Reading
To Top