கல்யாண பேச்சை எடுக்கும் மகேஷ், ஆனந்திக்காக மகேசை எதிர்க்கும் அன்பு.. விறுவிறுப்பான திருப்புங்களுடன் சிங்க பெண்ணே

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனந்தியின் சொந்த ஊருக்கு திருவிழா கொண்டாட்டத்திற்காக வரும் அன்பு மற்றும் மகேஷ் இருவரும் அவளுடைய குடும்பத்தின் மானத்தையே காப்பாற்ற உதவி புரிகிறார்கள்.

நகையை கொள்ளையடித்து அந்தப் பழியை ஆனந்தி குடும்பத்தின் மீது போடுவது தான் சுயம்புலிங்கத்தின் திட்டம். அந்தத் திட்டத்திற்கு பெரிய உதவியை மித்ரா செய்து விட்டாள். ஆனால் அன்பு மற்றும் மகேஷின் உதவியுடன் ஆனந்தி இந்த தவிடு பொடி ஆக்குவாள் என சுயம்புலிங்கம் எதிர்பார்க்கவே இல்லை.

கொள்ளையர்களிடமிருந்து நகையை பறித்துக் கொண்டு வரும் ஆனந்தியை உயிருடன் மண்ணுக்குள் புதைப்பதோடு அவளுடைய கதை முடிந்து விட்டது என நினைத்தான். ஆனால் அன்பு மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து ஆனந்தியை காப்பாற்றி விட்டார்கள்.

விறுவிறுப்பான திருப்புங்களுடன் சிங்க பெண்ணே

கொள்ளையடிக்கப்பட்ட நகையுடன் பஞ்சாயத்துக்கு வந்த ஆனந்தி, அன்பு, மகேஷ் மூன்று பேரும் அழகப்பன் மீது இருந்த பெரிய குற்றச்சாட்டை தவறு என நிரூபித்து இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய காதலி ஆனந்தி தான் என மகேஷ் அன்புவிடம் தெரிவித்து விட்டான்.

அதுமட்டுமில்லாமல் ஊருக்கு கிளம்புவதற்கு முன் ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் கல்யாணத்தை பற்றி பேசுவது என முடிவெடுத்து இருக்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி, அன்பு மற்றும் மகேஷ் இருவரும் இதே போன்று தனுடன் இருக்க வேண்டும்.

அவர்கள் இருக்கும் வரை தனக்கு எந்த ஆபத்தும் வராது என நினைக்கிறாள். மகேஷ் எப்படி அன்பு விடம் தன்னுடைய காதலை பற்றி சொன்னானோ அதே மாதிரி ஆனந்தியின் குடும்பத்தாரிடம் கல்யாணத்தைப் பற்றி பேசி விட வேண்டும் என முடிவெடுக்கிறான்.

மற்றொரு பக்கம் அன்பு மகேஷ் காக ஆனந்தியின் மீதான காதலை விட்டுக் கொடுப்பதா, அல்லது ஆனந்திக்காக மகேசை எதிர்ப்பதா என யோசித்து இருதலை கொள்ளியாக துடித்துக் கொண்டிருக்கிறான். இதற்கு எல்லாம் பதில் இனி வரும் வாரங்களில் தான் தெரியும்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -