தமிழகத்தின் பாராம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டில் மாடுகளை துன்புறுத்துவதாக பொய் குற்றச்சாட்டுக்களை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை விதித்தது.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை காலங்களில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களது அரசியல் லாபத்தை தேடி வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த போராட்டம் தன்னெழுச்சியாக ஆரம்பித்து மிக பிரம்மாண்டமாக தமிழகம் முழுவதும் தீவிரமானது.

மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. இதனை பார்த்து திகைத்த அரசியல் கட்சிகள் செய்வதறியாது விழிபிதுங்கி நிலையில் காணப்பட்டனர்.

மாணவர்களை போராட்டம் தீவிரத்தை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பித்து அனுமதி வழங்கியது. மேலும் நிரந்தர சட்டம் பிறப்பிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான (யுனெஸ்கோ) ஜல்லிக்கட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இதனால் இனி உலகில் எந்த நாட்டிலும் ஜல்லிக்கட்டை தடை செய்ய முடியாது எனவும் அறிவித்துள்ளது. மேலும் பீட்டா அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டிற்கு உலக அரங்கில் மகுடம் சூட்ட மாணவர்களின் புரட்சி காரணமாக விளங்குவதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.