செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

திடீரென தலையெழுத்தே மாறிய 5 படங்கள் .. கங்குவா சூர்யாவிற்கு ஏதேனும் வழி உண்டா?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிடப்பட்ட படங்கள் அதன் பின் பட்டையைக் கிளப்பிய கதைகளெல்லாம் இங்கே பார்த்துள்ளோம் . அதேபோல் இப்பொழுது கங்குவா படத்தில் கிட்டத்தட்ட 23 நிமிடங்கள் கட் செய்துள்ளனர். அதிக ஒளி எழுப்பிய ஆடியோக்களையும் கரெக்டான மிக்சரில் ரெடி பண்ணி உள்ளனர். ஏற்கனவே முதலில் விலை போகாத ஐந்து படங்கள்

சேது: 1999இல் இயக்குனர் பாலாவால் இந்த படம் உருவாக்கப்பட்டது.. ஆரம்பத்தில் இந்த படம் மக்களிடம் சென்றடையவில்லை. அதன் பின் திடீரென மாறிய தலையெழுத்தை போல் இந்த படம் பட்டையை கிளப்பியது. பாலாவிற்கு இதுதான் முதல் படம். அதேபோல் விக்ரமுக்கும் வாழ்க்கை தந்த படம் இதுதான்.

சித்திரம் பேசுதடி: மிஸ்கினை முதல் முதலாக இயக்குனரா அறிமுகப்படுத்திய படம் இது. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு மக்களின் ஆதரவு கம்மியாக தான் இருந்தது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டாலும் அதன் பிறகு நன்றாக சென்றது.

கன்னத்தில் முத்தமிட்டால்: சுஜாதாவின் நாவலை மையமாக வைத்து மணிரத்தினத்தால் எடுக்கப்பட்ட படம். அம்மாவை தொலைத்த மகளுக்கும் , தாய்க்கும் நடக்கும் பாசப் போராட்டம் தான் கதையின் கரு. ஆரம்பத்தில் இதற்கு ஆதரவு இல்லாட்டாலும் அதன் பிறகு தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

துருவங்கள் பதினாறு: சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு முதலில் ஆதரவு கிடைக்கவில்லை. அதன் பிறகு இந்த படத்திற்கு ஆதரவு பெருகியது. தியேட்டரில் நன்றாக வசூலை பெற்று தந்தது. இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

நான்: விஜய் ஆண்டனியை ஒரு நடிகனாய் களத்தில் நிலை நிறுத்தியது இந்த படம் தான். சஸ்பென்ஸ் திரில்லராக முதல் படத்திலேயே அசத்தியிருந்தார் இயக்குனர் ஜீவா சங்கர். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ஆதரவு இல்லாவிட்டாலும் அதன் பிறகு இது நன்றாக போனது.

- Advertisement -

Trending News