fbpx
Connect with us

Cinemapettai

சந்திராயன்-2வை கேலி செய்த பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா அணி.. அதிரடியாக அரையிறுதியில் நுழைந்தது

Sports | விளையாட்டு

சந்திராயன்-2வை கேலி செய்த பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா அணி.. அதிரடியாக அரையிறுதியில் நுழைந்தது

ஆசிய கோப்பை U19னில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது இந்திய அணி.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த U19 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. இதில் அர்ஜுன் அசாத்(121) மற்றும் திலக் வர்மா(110)ஆகியோர் சதம் அடித்து அசத்தினார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா மற்றும் அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணியின் அர்ஜுன் ஆசாத் ஆட்டநாயகன் விருதை பெற்றார். சீனியர் இந்திய அணி வீரர்களை போலவே ஜூனியர் வீரர்களும் “பச்சை சட்டை போட்டா நாங்க அடிப்போம்”என்று நிரூபித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top