ஹைதராபாத்: ஐபிஎல் பைனல் போட்டியில் மிகச்சிறந்த கேட்சை பவுலர் உனட்கட் பிடித்தார்.

10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவிக்கு வருகிறது. இன்று நடைபெறும் பைனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் புனே அணிகள் மோதுகின்றன.

இதில் மும்பை அணி ஓப்பனிங் பேட்ஸ்மேன் பார்த்திவ் பட்டேலை மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் அவுட் செய்தார் புனே வேகப்பந்து வீச்சாளர் உனட்கட். தாக்கூர் அந்த கேட்சை பிடித்தார்.

அந்த ஓவரின் 4வது பந்தை மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சிம்மன்ஸ் சந்தித்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனட்கட் அந்த பந்தை, லெக் கட் செய்தார். பந்து வேகம் குறைந்து பேட்ஸ்மேனை நெருங்கியது. பேட்ஸ்மேன் அதை லெக் திசையில் தட்டி சிங்கிள் ஓட முயன்றார். ஆனால் மெதுவாக வந்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு எதிர் ஸ்டெம்பை நோக்கி வந்தது. அப்போது பந்தை போட்டுவிட்டு ஃபாலோஅப் ஓடிக்கொண்டிருந்த உனட்கட், தனது இடது புறமாக சரிந்து பந்தை இடது கையால் பிடித்தார்.

பிடித்த வேகத்தில் பந்து கீழே பட்டுவிடாமல் கையை கீழே கொடுத்து தாங்கிக்கொண்டார். இதனால் சிம்மன்ஸ் அவுட்டானார். இந்த கேட்ச் ஐபிஎல் தொடரின் பெஸ்ட் கேட்சுகளில் ஒன்றாகியது. மேலும் போட்டியின் ஆரம்பத்திலேயே மும்பை இந்தியன்சை பேக்ஃபுட்டுக்கு கொண்டு சென்றது.