சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலனை கண்டுபிடிப்பதற்கு இதுவரை மத்திய மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில். சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முகிலனை கண்டுபிடிப்பதற்கு என்ன முயற்சிகள் எடுத்து உள்ளீர்கள் என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சமூக நல ஆர்வலர் ஆவார். முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி துப்பாக்கிச் சூடு என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார்.
அதற்குப் பின்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வந்தவர் திடீரென்று காணவில்லை. இவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிப்படையாக அரசு தரப்பில் குறிப்பிடப்படவில்லை.

அவர் காணாமல் போய் 4 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஐநாவின் தலைமையிடமாக கொண்ட சுவிட்சர்லாந்திலிருந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூகத்திற்காக இது போன்றவர்கள் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக பயமுறுத்தும் இந்த அரசை கண்டித்து பல பிரபலங்கள் போராடினார்கள்.