திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

அகந்தையால் 5 ரன்களை வாரி கொடுத்த பாபர் அசாம்.. யாருகிட்ட திமிருகிறாய்ன்னு வச்சி செய்த அம்பையர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் பாபர் அசாம் செய்த செய்கையால் 5 ரன்கள் பெனால்டியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த மாதிரி ஒரு பெனால்டி ரன்கள் கொடுப்பது மிகவும் அபூர்வம்.

சற்றும் யோசிக்காமல் அம்பையர் கைகளை உயர்த்தி இந்த பெனால்டி ரன்களை கொடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒரு நாள் போட்டியில் மோதியது. இந்த போட்டி பாகிஸ்தான் நாட்டில் உள்ள முல்தான் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தான் அம்பையர் அலீம் தார் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த ரன்களை கொடுத்தார்.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 276 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயித்தது. பின்னர் இரண்டாவதாக தனது 29ஆவது ஓவரில் ஆடிக் கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ஷ்டமாக பாபர் அசாம் கையால், நடந்த செய்கையால் ஐந்து ரன்கள் அபராதமாக கொடுக்கப்பட்டது.

விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த முகமது ரிஸ்வான் கையில் அணிந்திருந்த ஒரு கிளவுஸ்ஸை கழற்றி எரிந்து விட்டு பந்தை பிடிக்க ஓடினார். மறுமணையில் பந்தை ரெக்கவரி செய்ய வந்த பாபர் அசாம் அந்த கையுரையை எடுத்து மாட்டிக்கொண்டு பந்தை பிடித்தார். இது விதிகளின்படி தப்பு.

பாபர் அசாம் செய்த தப்பான செய்கையால் எதிரணிக்கு 5 ரன்கள் அபராதமாக கொடுத்தார் அப்பொழுது அம்பையராக பணியாற்றிய ஆலிம் தார். இப்படி விக்கெட் கீப்பர் கிளவுஸ்ஸை மற்றவர் பயன்படுத்துவது தவறு. ஏதாவது கையில் அடிபட்டு பாதுகாப்பு உரை பயன்படுத்த வேண்டும் என்றாலும், கால்களில் சேஃப்டி பேட் கட்ட வேண்டும் என்றாலும் நடுவரிடம் சொல்லிய பின்பு தான் செயல்படுத்த வேண்டும்.

- Advertisement -

Trending News