vishal
vishal

‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா, பாலசரவணன், ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ள ‘உள்குத்து’ திரைப்படம் வருகிற 29  ஆம் தேதி வெளியாகிறது.  இதனை முன்னிட்டு  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இப்படத்தின் தயாரிப்பாளர் விட்டால் குமார் நிருபர்களிடம் பேசியது ” படம் வெளியாவதற்கு முக்கிய காரணம் கடவுளும், விஷால் சாரும் தான். இந்த படம் வெளியாகுமா என்ற நிலை இருந்தபோது விஷால் சார் தான் அந்த பிரச்சனைகளை முடித்து வைத்து படம் வெளியாக உதவி செய்தார்.இசை கலைஞனாக இருக்கும் எனக்கு சினிமா மீதுள்ள ஆசையில் நான் தயாரித்துள்ள முதல் படம் இது.” என்றார்.

ஹீரோ அட்டகத்தி டேனிஷ் பேசுகையில் “நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடித்த ‘உள்குத்து’ வெளியாகவிருக்கிறது. இந்த படம் ரெடியாகி சில ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீசாகாமல் இருந்து வந்தது. இந்த இடைவெளியில் வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாகி உள்ளனர். இந்த படம் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். மேலும், கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.” என்றார்.

 

‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்கியுள்ளார். அவர் பேசும் பொழுது “உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே இயக்குனர் ஆனேன். நான் இயக்கிய முதல் படமான, திருடன் போலீஸ் படம் வரவேற்பை பெற்றதால், உள்குத்து படத்தை இயக்கினேன்.பலதரப்பட்ட மீனவர்களை சந்தித்து, அதில் கிடைத்த பல சுவாரசிய தகவல்களையும், என் கற்பனையையும் இணைத்து உருவானதே, உள்குத்து படம்.எனக்கு காமெடி மற்றும் உணர்ச்சிமயமான கதையை எடுக்கவே பிடிக்கும்.” என்றார்.

டிசம்பர் 29 தேதியில் ஜெய், அஞ்சலி நடித்துள்ள ‘பலூன்’, தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா இணைந்து நடித்துள்ள ‘களவாடிய பொழுதுகள்’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில் அந்த படங்களுடன் ‘அட்டகத்தி’ தினேஷின் ‘உள்குத்து’ படமும் வெளியாகவிருக்கிறது,.