Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி பட ரீ மேக்கில் உதயநிதி! கதை இது தான்.. இயக்குனர் யார் தெரியுமா

தமிழக அரசியல் வாரிசான உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தயாரிப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். உதயநிதி அவ்வப்பொழுது நல்ல படங்களையும் கொடுத்து வருகிறார். அந்த லிஸ்டில் மனிதன், சைக்கோ போன்றவை அடங்கும். இவர் நடிக்கும் புதிய பட அறிவிப்பு நேற்று வெளியானது.

2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’.(மதம், இனம், சாதி, மொழி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்யும் சட்டம்தான் ‘ஆர்டிகிள் 15.) ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழில் யாரை வைத்து ரீமேக் பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் கனா படப்புகழ் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.

article 15 remake

கதை – ஒரு கிராமத்தில் இரண்டு ஏழை சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குப்பின் கொலை செய்யப்பட்டு, மரக்கிளையில் தொங்க விடப்படுகிறார்கள். அதன் விசாரணையை துவங்கும் டெல்லியை சேர்ந்த புதிய அதிகாரிக்கு சாதியின் பெயரால் பல்வேறு தடைகள் மற்றும் தடங்கல்களை சந்திக்கிறார். உள்ளூர் மக்கள், அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி, அந்த அதிகாரி என்ன செய்கிறார் எப்படி கேஸை முடிக்கிறார் என்பதை இப்படம்.

இப்படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் (ராகுல்) நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Continue Reading
To Top