News | செய்திகள்
‘யோவ், உனக்கும் பான்ஸ் எல்லாம் இருக்காங்களா ?’ என கேட்டவருக்கு உதயநிதி சொன்ன பதில் என்ன தெரியுமா ?
உதயநிதி ஸ்டாலின்
ரெட் ஜியன்ட் மூவிஸ் என்ற நிறுவனம் மூலமாக தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். பின்னர் விநியோகிஸ்தர், நடிகர் என்று மனிதர் கோலிவுட்டில் தற்ப்பொழுது நன்றாக செட் ஆகிவிட்டார். காமெடி படங்களில் தன் ஹீரோ பயணத்தை தொடங்கிய அவர் இன்று காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று அணைத்து ஜானர்களிலும் படம் நடித்து விட்டார். விவசாயியாக இவர் நடித்துள்ள சீனு ராமசாயின் “கண்ணே கலைமானே” ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.
கடந்த 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. பணம் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், பலரும் நிவாரணப்பொருட்களையும் அனுப்பி வருகின்றனர்.

Udhayanithi Stalin
அந்தவகையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது, இதனை அவர் மன்ற நிர்வாகி ட்விட்டரில் பதிவிட்டுருந்தார்.
— Udhay (@Udhaystalin) November 23, 2018
இந்த ஸ்டேட்டஸுக்கு தான் விஷமி நபர் ஒருவர் “யோவ் உனக்கு பான்ஸ் எல்லாம் இருக்காங்களா ?” என்று கிண்டலாக கேட்டார்.
Fans laam illa nanba.. நற்பணி செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் நண்பர்கள் ! 😁 https://t.co/5CupHekFiu
— Udhay (@Udhaystalin) November 23, 2018
துளியும் டென்சன் ஆகாமல் உதய், ” பான்ஸ் இல்ல நற்பணி செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் நண்பர்கள் ! ” என்று கூறியுள்ளார்.
