பட்டப்பெயர் வைத்து கொள்வதில் தவறில்லை. அவங்க இஷ்டம் அவங்க ரசிகர் கூட்டம். ஆனால் சற்று நல்ல படங்களை கொடுத்துவிட்டு வைக்கலாம். நம்ம உதயநிதி அந்த லிஸ்டில் வந்துவிடுவார் போல. மனிதன் என்ற நல்ல படத்தை கொடுத்தார். நடிக்கவும் செய்தார். அதனால் அவர் சும்மா இருந்தாலும் அவர் விசிறிகள் சும்மா இருக்க மாட்டாங்க போலருக்கு.

மக்களின் விருப்பமான நாயகன் விஜய் சேதுபதிக்கு அவருடைய ‘தர்மதுரை’ படத்தின் மூலம் மக்கள் செல்வன் என்ற பட்ட பெயரை வைத்தார் இயக்குனர் சீனு ராமசாமி. இதனையடுத்து சமீபத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தை பார்த்த சீனுராமசாமி தனது டுவிட்டரில் ‘கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை “மக்கள் அன்பன்” என்றே அழைக்கத் தோன்றியது’ என்று கூறியுள்ளார். அதிலும் உதயநிதி தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அவருடைய ட்விட்டர் பதிவு.