fbpx
Connect with us

Cinemapettai

நாம் தமிழரை பின்பற்றும் திமுக இளைஞரணி தலைவர்.. குவியும் பாராட்டுக்கள்

Politics | அரசியல்

நாம் தமிழரை பின்பற்றும் திமுக இளைஞரணி தலைவர்.. குவியும் பாராட்டுக்கள்

சில வருடங்களாகவே இயற்கைக்கு  சீற்றங்களை காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சியினர்  பனை மரத்தின் விதையை பல்வேறு இடங்களில் நட்டு வருகின்றனர்,  குளம் மற்றும் ஏரிகளை தூர்வாருதல் மனிதனை சார்ந்திருக்கும் மற்ற ஜீவராசிகளை தனக்கு நிகராக பார்ப்பது போன்ற அனைத்து  செயல்களையும் முன்னிறுத்தி கட்சியினை வழி நடத்தி வருகின்றனர்.

தற்போது அதேபோல் களத்தில் இறங்கியுள்ள திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுடன் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் கே.கே.நகரில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணியில் இறங்கியுள்ளனர். இது மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னையை மட்டும் காப்பாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நாம் கிராமங்களுக்கும் சென்று இதுபோன்ற தூர்வார பணிகளை செய்து வந்தாலே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கோடைகாலத்தில் நமக்கு தேவையான தண்ணீரை பெறலாம்.

அரசியலைத் தாண்டி சமூகத்திற்கு இதுபோன்ற செயல்களை செய்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அதுமட்டுமில்லாமல் இயற்கை வளங்களை காப்பதன் மூலம் நமது அடுத்த தலைமுறையும் காப்பாற்றலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top