‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Ajith
Ajith

இப்படத்தில் தனது வழக்கமான கூட்டணியை மாற்றலாம் என்று முடிவு செய்திருக்கிறார் சிவா. அனிருத்துக்கு பதிலாக இதற்கு யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தோள்பட்டை அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அஜித், டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிவாவிடம் முழுக் கதையையும் கேட்டு முடிவு செய்யவுள்ளார் அஜித்.

ajith

அடுத்த பிப்ரவரியில் இக்கூட்டணி இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க சத்யஜோதி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு 2018 பொங்கலுக்கு வெளியிடலாமா என்று பேசி வருகிறார்கள்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Aarambam Ajith

அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’, ‘பில்லா’, ‘ஏகன்’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’ மற்றும் ‘ஆரம்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன். இக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறது.

அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாம்.

படம் தீபாவளிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் உதயநிதி சமீபத்தில் ஒரு வானொலியில் இப்படை வெல்லும் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துக்கொண்டார்.

ajith

அதில் அவரிடம் எப்போது தல அஜித்தை வைத்து தயாரிப்பீர்கள் என கேட்க, ‘நானும் இரண்டு முறை இதற்காக அவரை சந்தித்து பேசிவிட்டேன்.

ஆனால், அவருக்கு ஓகே என்று தோன்ற வேண்டும், நீங்கள் கேட்பதற்காக நான் அவர் கையை பிடித்து இழுத்து வர முடியுமா? சொல்லுங்க பாக்கலாம்’ என பதில் அளித்துள்ளார்