Connect with us
Cinemapettai

Cinemapettai

udhaya-nithi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உதயநிதி பட தயாரிப்பாளர் தங்க கடத்தல் தலைவரா? டான் கூட எல்லாம் பிரண்ட்ஷிப்பா பாஸ்!

தமிழக அரசியல் வாரிசான உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தயாரிப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒரு சில மொக்கை படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல படங்களையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வந்த சைக்கோ படம் வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் நிமிர். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடையே உதயநிதி ஸ்டாலினை ஒரு நடிகராக கொண்டு சேர்த்தது.

இந்த படத்தை தயாரித்தவர் கேரள தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா. இதற்கு முன்னர் டோவினோ தோமஸ் நடித்த மாயநதி என்னும் படத்தையும் தயாரித்திருந்தார். அந்தப் படத்தை தங்க கடத்தல் செய்த பணத்தில் தான் தயாரித்த என தற்போது அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

udhay-sandhosh

udhay-sandhosh

தன் மீது வேண்டுமென்றே இந்த மாதிரி பழிபோடுவதால் யாருக்கு என்ன லாபம் என புலம்பிக் கொண்டிருக்கிறார் சந்தோஷ் குருவில்லா. சமீபத்தில் கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் தலைதூக்கியுள்ளது.

பிரபல நடிகை ஒருவர் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தங்க கடத்தலில் பல சினிமா பிரபலங்கள் பெயர்கள் அடிபடுகின்றன.

Continue Reading
To Top