உதயநிதி தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் நடைபெற்று வந்தது.

அதில் வேலப்பர் கோவில் பகுதியில் நேற்று படப்பிடிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் அது வனப்பகுதி என்பதால் வனப்பகுதியினர் அனுமதி இல்லாமல் அங்கே படப்பிடிப்பு நடத்தக்கூடாது என ஒருசிலர் பிரச்சனை செய்தனர். இதைதொடர்ந்து படப்பிடிப்பை ரத்து செய்து படக்குழுவினர் திரும்பிவிட்டனர்.