சினிமாவை தூக்கி நிறுத்துகிறாரா உதயநிதி.? தேடி போய் சரண்டர் ஆகும் பெரும் முதலாளிகள்

திமுக ஆட்சி பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிறது. அனைத்து திட்டங்களும் செயல்களும் மிக விரைவாக வேகமாக நடந்து வருகிறது. அனைத்து எம்எல்ஏக்களும் மந்திரிகளும் மக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதை நாம் பல தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொள்கிறோம்.

ஆனா மக்களுக்கு என்னமோ ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருக்கு அது என்னன்னா . இவங்க டிவி நடத்தறாங்க, நியூஸ் பேப்பர் நடத்துறாங்க, இது இல்லாம உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனா நடிச்சு இருக்காரு, படங்களை தயாரிக்கிறார். ஒரு வித பயத்தோடு சந்தேகத்துடனும் மக்கள் பார்க்கிறார்கள்.

இது போக எல்லா படமும் பாருங்க படம் எடுக்கிறது ரெட் ஜெயன்ட், படத்தை வெளியிடுவது ரெட் ஜெயண்ட், முக்கியமான படங்கள்ல கதாநாயகனா நடிக்கிறது உதயநிதி ஸ்டாலின். இது இல்லாம சன் பிக்சர்ஸ் உச்ச நட்சத்திரங்கள் வச்சி பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்குறாங்க. எல்லா படமும் தோல்வி படமாக இருந்தாலும் படம் எடுத்துக்கிட்டு இருக்காங்க. இதுதான் சந்தேகம் மக்களுக்கு.

என்ன சந்தேகம்னா முன்னாடி திமுக ஆட்சியில் சில விஷயங்கள் மக்கள் மனசுல பதிஞ்சு போச்சு அதுதான் இப்ப நடக்கிறது. எல்லாரும் சந்தேகத்துடன் பாக்குறாங்க. முக்கியமா சினிமாவுல எல்லாம் பயந்துகிட்டு இருக்காங்க,  எல்லாமே அவங்க சொல்றது தான் பயப்படுறாங்க. உண்மை என்னன்னு பார்த்தா வேற மாதிரி இருக்கு.

வெளியிட முடியாத பல தமிழ் படங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அதை வெளியிட்டு கொடுக்குறாங்க. இது என்ன ஸ்பெஷல் பணம் வாங்காமல் வெளியிட்ட பிறகு அதற்கான கமிசன் மட்டும் வாங்குறாங்க.

இதனால எல்லா தயாரிப்பாளர்களும் தன்னோட படங்களை வெளியிட தேடி போறாங்க இது மிக ஆரோக்கியமான விஷயம் சினிமாவில்ல. இது தெரியாம நம்ப வெளியில அவங்கள சந்தேகத்துடன் பார்க்கிறோம். அதனால இப்ப எல்லா படங்களும் அவங்கள முயற்சியில் அழகா அற்புதமா வெளில வருது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்