Connect with us

Cinemapettai

udhayanithi-stalin

Politics | அரசியல்

எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் நச் பதிலடி

திமுக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்து மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று உள்ளார்.

இந்தக் காரணத்தினால்தான் இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல எச்.ராஜா இதைப்பற்றி விமர்சித்துள்ளார் அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாரிசு அரசியல் இருக்கவே இருக்காது என்று கூறிய உதயநிதி தற்போது எப்படி பொறுப்பேற்றிருக்கிறார் என்று தெரியவில்லை.

இதற்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் வாரிசு அரசியல் என்பதை ஒட்டுமொத்த திமுகவின் இளைஞர்களுக்கு கிடைத்த அங்கீகாரமே என்று கருதுகிறேன். அதுமட்டுமல்லாமல் வாரிசு அரசியல் என்பதை என்னுடைய செயல்பாடு தக்க பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான மகேஷ் எம்.எல்.ஏ கூறுகையில் பதவி ஆசை இல்லை அவருக்கு, கட்சியில் தன்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இளைஞர்களுக்காக பதவியேற்றுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top