மனிதன்’ வெற்றிக்கு பின்னர் உற்சாகமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். அவற்றில் ஒரு படத்தை எழில் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.(சந்திரமுகி படத்தில் ரஜினி கூறும் வசனம்)

உதயநிதி, ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே உள்பட பலர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் உதயநிதி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘தூங்கா நகரம்’ கெளரவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

saravananirukkabayamaen