அரசியலுக்கு வரமாட்டேன் என்ற உதயநிதி ஸ்டாலின்.. இப்போ அமைச்சர் பதவி வரைக்கும் பேச்சு அடிபடுதேப்பா!

தமிழக அரசியலைப் பொறுத்தவரை எப்போதுமே சினிமாக்காரர்களுக்கும் அரசியலுக்கும் ஒரு நெருக்கமான உறவு உண்டு. தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, வசன கர்த்தாவாக இருந்த கருணாநிதி போன்ற பலரும் முதலமைச்சர் அரியணை ஏறியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் இன்று பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிவிட்டார்.

சினிமா நடிகர்கள் அரசியலில் இருந்து கொண்டே சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய தொகுதியை கவனித்துக் கொண்டே தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

இது ஒருபுறமிருக்க ஒருமுறை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின், கட்சியில் உழைத்த தொண்டர்கள் பலர் இருக்கும்போது அரசியல் வாரிசு என்ற பெயரில் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை என பேசியிருந்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களாக திமுக இளைஞரணி தலைவராக செயலாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின் சைடு கேப்பில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்எல்ஏ ஆகிவிட்டார். எம்எல்ஏ ஆனதோடு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று விட்டார்.

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என அரசியல் வட்டாரங்களில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில வருடங்களுக்கு முன்பு அரசியல் வாரிசாக இருந்தால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சர் போட்டியில் இருப்பது பலருக்கும் அரசியல்வாதிகள் இப்படி மாற்றி மாற்றி பேசுவது ஒன்றும் புதியதல்ல என்ற கணக்கில் சேர்ந்து விட்டதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்