Connect with us
Cinemapettai

Cinemapettai

udhayanithi-stalin-entry-in-politics

Politics | அரசியல்

சினிமாவிற்கு டாட்டா.. முதல்வன் ஸ்டைல் அரசியலில் உதயநிதி.. முதல் கட்ட நடவடிக்கை பாருங்க

சினிமாவிற்கு பாய் சொல்லி விட்டு முழுநேர அரசியல் களத்தில் இறங்க உள்ளார் திமுகவின் முக்கிய உறுப்பினர். யார் தெரியுமா? எதற்காக தெரியுமா ?

நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக பல இடங்களில் வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது ஸ்டாலின் கட்சியின் வளர்சிக்கான அடுத்த கட்ட பணிகளை கட்சி நிர்வாகியிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

நடைபெற்ற தேர்தலில் பல இடங்களில் பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்சியின் நிர்வாகிகள் ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் குதித்தால் நமது கட்சி சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், நெருக்கமான உறுப்பினர்களும் இதைத்தான் கூறியுள்ளனர். அதனால் உதயநிதி ஸ்டாலின் சினிமாவை விட்டு சிறிது காலத்திற்கு அப்பாவுக்கு துணையாக கட்சியில் பணியாற்றலாம் என முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆந்திராவில் ஜெகன் வெற்றிக்கு காரணம் அவரது மக்கள் சந்திப்பு தான். அதேபோல் உதயநிதியும் மக்களை அடிக்கடி சந்திப்பது ஒரு சிறிய மாற்றம் உண்டாகும் என கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top