ஒன்பது டைட்டிலுக்கு நாமினேட் செய்யப்பட்ட மிஷ்கின் படம்.. லோ பட்ஜெட்டில் பிரம்மாண்ட வரவேற்பு

திமுக-வின் சேக்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி. இவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும் ஆவார்.

ஆரம்பத்தில் தயாரிப்பாளராக களமிறங்கிய உதயநிதி தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு காமெடி படங்களை நடித்து வந்தவருக்கு முதல் ஆக்சன் படமாக அமைந்தது கெத்து வரிசையாக மனிதன் துளிர் என மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு மிஷ்கின் இக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் இப்போது வரை பேசும் படைப்பாக உள்ளது. பி.சி.ஸ்ரீராம் கேமராவில் ஜொலித்தவருக்கு இசைஞானியின் பின்னணி இன்னும் ஒரு பிளஸ்.

psycho-udhay-cinemapettai
psycho-udhay-cinemapettai

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த உதயநிதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இப்போது இந்த படம் SIIMA 2020 -ல் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக முதல் முறையாக 9 அவார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிரைம் திரில்லர் படம் எனற பெருமையை தட்டிச்செல்கிறது இப்படம்.

சிறந்த நடிகருக்கான விருதும் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல். ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் தயாரிப்பு என பிசியாக இருந்த உதயநிதிக்கு மேலும் ஒரு மகுடமாக இந்த செய்தி கிடைத்திருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்