திரைக்கு வரும் ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களின் படங்களை தமிழக திரையரங்கு விநியோக உரிமையை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கைப்பற்றி வருவதாக மற்ற தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 13ம் தேதி டான் திரைப்படம் வெளியாக இருப்பதால், அந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் வாங்கியுள்ளது.
இப்படி ரெட் ஜெயிண்ட் எல்லா படங்களையும் வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள் என்ற ஒரு பெரும் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது அவர்களுக்கும் ஆதரவு எல்லா பக்கமும் பெருகி வருகிறது. ஏனென்றால் உதயநிதி ஸ்டாலின் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து உதவி வருகிறார்.
ஆகையால் இப்பொழுது அனைவரும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பக்கம் நிற்கின்றனர். குறிப்பாக தியேட்டர்கள் செய்யும் முறைகேடுகளை களையெடுத்து வருகிறார் உதயநிதி. ஒரு டிக்கெட்டை190 ரூபாய்க்கு விற்றுவிட்டு 220 ரூபாய் என்று கணக்கு காட்டுகிறார்கள். அதே போல் 50, 60 டிக்கெட்டுகளை கணக்கு காட்டுவது கிடையாது. கோயமுத்தூரில் உள்ள தியேட்டர்கள் இந்த மாதிரி அராஜகம் செய்து வருகிறது.
பட விநியோகஸ்தராக ஒருவருக்கு கோயமுத்தூரில் பல தியேட்டர்கள் இருக்கிறது. இவர் முறையீடு செய்ததை கையும் களவுமாக கண்டுபிடித்து விட்டனர். இதனால் இந்தப் பிரச்சினைகள் பெருகுவதால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்ற்கு படத்தை கொடுக்கிறார்கள். என்னதான் அரசியல், நடிப்பு, சினிமா தயாரிப்பு என்று உதயநிதி ஸ்டாலின் பிஸியாக இருந்தாலும் தற்சமயம் சினிமா வணிகத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, தளபதியின் பீஸ்ட், மேலும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் என சூப்பர் ஹிட் படங்களின் உரிமைகளை எல்லாம் வாங்கிக் குவிப்பதால் மற்ற தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என புலம்புகின்றனர்.
அதுமட்டுமின்றி கடந்த 2006 முதல் 2011ஆம் வருடங்களில் மாறன் சகோதரர்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவது போல் தற்போது உதயநிதியும் சினிமா வணிகத்தில் மற்ற தயாரிப்பாளர்களை தலைதூக்க விடாமல் செய்கிறார் என்ற சர்ச்சையும் கிளம்புகிறது.