மீண்டும் உதயமாகும் கிடப்பில் போட்ட பிரம்மாண்ட படம்.. பலே திட்டம் போட்ட உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ்சினிமாவில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் கைப்பற்றி வருகிறார். சிவகார்த்திகேயனின் டான் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தையும் உதயநிதி தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்று இருந்தார். விக்ரம் படம் வேற லெவலில் வசூலில் வேட்டையாடி வருகிறது. இதனால் விக்ரம் படத்தின் மூலம் உதயநிதி பல மடங்கு லாபம் அடைந்துள்ளார்.

தற்போது கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு அடி போட்டுவருகிறார் உதயநிதி. அதாவது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் சில காரணங்களால் பாதியிலேயே நின்று போனது. முதலில் ட்ரோன் விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு இப்படத்தின் தயாரிப்பாளரான லைகா தயாரிப்பு நிறுவனர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையே மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்ட நீதிமன்றம் வரை சென்றது. இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோனது.

அதுமட்டுமன்றி கமலுக்கும் இப்படத்தில் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நின்றுபோன இந்தியன் 2 படத்திற்கு நாட்டாமையாக செயல்பட்டு வருகிறார். தற்போது கமலஹாசன், ஷங்கர், சுபாஷ்கரன் 3 பேரையும் சமாதானம் செய்யும் விதமாக உதயநிதி செயல்பட்ட வருகிறாராம்.

அதில் சங்கர் மற்றும் சுபாஷ்கரன் இடம் பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்து உள்ளாராம். இதனால் மிக விரைவில் இந்தியன் 2 படம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக இப்படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்