சிம்பு படம் தள்ளிப்போனதற்கு உதயநிதி தான் காரணம்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

சிம்பு என்றாலே சர்ச்சைக்கு பேர் போனவர் என்று தான் கூறப்பட்டு வருகிறது. அதனாலோ என்னவோ தெரியவில்லை சிம்புவின் படம் ஒவ்வொரு முறை ரிலீஸ் செய்யும் போதும் ஏதாவது தடங்கள் ஏற்பட்டு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரிலீஸ் ஆவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.

மேலும் மாநாடு விழா மேடையிலேயே தன்னுடைய கஷ்டம் தாங்க முடியாமல் ரசிகர்கள் முன் சிம்பு கண்ணீர் சிந்தினார். இந்நிலையில் மாநாடு ரிலீஸ் ஆவதில் மிகப்பெரிய பிரச்சனை உண்டாக காரணம் உதயநிதி தான் என அரசியல் பிரபலம் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Also Read : ரெட் ஜெயண்ட்க்கு பினாமி இவர் தான்.. உதயநிதியை வச்சு செய்யும் பிரபலம்

உதயநிதி தான் தமிழ்நாட்டில் எல்லா படங்களையும் வினியோகம் செய்து வருகிறார். ஆனால் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து, வெளியிட்டு இருந்தார். முதலில் மாநாடு படம் 2021 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று ரஜினியின் அண்ணாத்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வெளியிட்டது. எனவே அண்ணாத்த படத்திற்கு போட்டியாக மாநாடு படம் ரிலீஸ் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு திட்டம் போட்டு காய் நகர்த்தி உள்ளதாக பேட்டி ஒன்றில் சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.

Also Read : அள்ள அள்ள குறையாத கஜானா, தொட்டதெல்லாம் பொன்னாகுது.. பல்லாயிரம் கோடி முதலீட்டில் உதயநிதி

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உள்ள ரசிகர்கள் போல் சிம்புவுக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரின் படங்கள் வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று உதயநிதி இவ்வாறு திட்டம் போட்டிருந்தார். மேலும் தீபாவளி முடிந்து சிறிது நாட்கள் கழித்து மாநாடு படம் வெளியானாலும் நல்ல கலெக்ஷனை அள்ளியது.

ஆனால் அண்ணாத்த படத்தைப் பார்த்துவிட்டு பாதியிலேயே ரசிகர்கள் திரையரங்குகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக அவர் கூறியுள்ளார். எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்கள் படம் எடுத்தாலும் உதயநிதி நினைத்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும். இதுதான் தற்போது தமிழ் சினிமாவின் நிலைமையாக உள்ளது என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Also Read : மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி.. அமைச்சர் ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியாது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்